அமெரிக்கா முதல் ஜப்பான், தென்கொரியா வரை உலகளாவிய நாடுகளின் தனிநபர் வரி..?- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-02-01

10 Views

06:38

2018-19ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் எவ்வளவு இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருமான வரி விகிதம் எவ்வளவு என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் 2017-18ம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவிகிதத்தைப் பொறுத்தவரையில் இரண்டரை லட்சம் வரையிலும் வரி கிடையாது. இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் 5 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதற்கு மேலும் பத்து லட்சம் வரையிலும் 10 சதவிகிதமும், இருபது லட்சம் வரையில் 20 சதவிகிதமும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவிகிமும், 50 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக உபரி வரியாக 10 சதவிகிமும் விதிக்கப்படுகிறது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு மேலும் கூடுதலாக உபரி வரியாக 15 சதவிகிமும் விதிக்கப்படுகிறது. இனி அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருமான வரிவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.


The tax payers are wait for the new income tax slabs that will be announced on February 1st. In the mean time we have to know the income tax slabs for in individuals on grown countries.

Trending Videos - 19 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 19, 2024