பாகிஸ்தான் பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்

பாகிஸ்தான் பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் புரூஸ் நார்மண்ட் மற்றும் டிமோதி மில்லர். மலையேற்ற வீரர்களான இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் உபேர் என்ற வீரருடன் நேற்று மலையேற்ற பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் சுமார் 19,000 அடி தொலைவுள்ள ஹன்சா சமவெளியில் உள்ள அல்டார் சர் மலையில் பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து வந்தது. அவர்கள் உதவியுடன் பனிச்சரிவில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் வீர்ர்கள் இருவரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், பனிச்சரிவில் சிக்கிய ஆஸ்திரேலிய மலையேற்ற வீரர் கிறிஸ்டியன் உபேர் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 00:58