சென்னையில் இன்று மாலையும் கனமழை வெளுக்குமாம்..வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-11-03

3.1K Views

01:55

இன்று மாலையும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை ஊற்றியது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
பல பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகள் நிரம்பியுள்ளதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை முதலே மழை பெய்ததால் அலுவலகம் சென்றவர்கள் நள்ளிரவு வரை வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பேருந்துகள் மிக குறைந்தளவே இயக்கப்பட்டன.

Norway government Meteorological site yr.no said heavy rain will continue today also in Chennai. Yesterday also norway meteorological center warned for heavy rain.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024