இந்திய கிரிக்கெட் வீரர்களின் ரத்த மாதிரியை கேட்கும் பிசிசிஐ... காரணம் தெரியுமா- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-11-13

440 Views

01:42

பிசிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் வீரர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்வதற்காக கேட்டு இருக்கிறது. அவர்களின் ரத்தத்தில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். உலகிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் மட்டும் தான் இது போன்ற டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் சோதனை முதன்முதலாக நடத்தப்பட இருக்கிறது. தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் மட்டும் இல்லாமல் வேறு சில வீரர்களும் இந்த சோதனைக்கு உள்ளாக இருக்கின்றனர். இந்திய வீரர்களை அணியில் தேர்ந்தெடுப்பதில் யோ-யோ டெஸ்ட் எந்த அளவுக்கு பங்கு வகிக்கிறதோ அதே அளவுக்கு இந்த டிஎன்ஏ டெஸ்டும் பங்கு வகிக்கும்

இந்திய வீரர்களின் உடல் பருமனை அளவிடுவதற்காக சில நாட்கள் முன்பு வரை 'ஸ்கின்ஃபோல்ட் டெஸ்ட்' என்ற பழமையான சோதனை செய்யப்பட்டு வந்தது. இதன்படி உடலில் சில அளவு கோல்களை வைத்து அளவிடுவர். ஆனால் இதற்கு பதிலாக இனி உடலின் எல்லாவிதமான திறனையும் கண்டுபிடிக்கும் வகையில் டிஎன்ஏ டெஸ்ட் நடத்தப்பட இருக்கிறது.

The Indian cricket palyers are now undergoing DNA test. BCCI says that this test will help a sportsman to improve speed, endurance, recovery time, form and muscle building.

Trending Videos - 29 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 29, 2024