சூடுபிடிக்கும் டெல்லி டெஸ்ட்...இந்தியா டிக்ளேர்..தள்ளாடும் இலங்கை- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-12-05

1.1K Views

01:41

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இலங்கை அணிக்கு இந்தியா 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிக விரைவாக டிக்ளேர் செய்தது. இலங்கையை மிக சொற்ப ரன்களில் சுருட்டிவிடும் திட்டத்தில் இந்தியா தைரியமாக டிக்ளேர் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இலங்கை அணி தள்ளாட தொடங்கிவிட்டது. வீரர்களை வரிசை மாற்றி இறக்கியும் அவர்களால் நிலையாக நின்று ஆட முடியவில்லை.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரோஹித் 65 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 155 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

Third test match between India vs Sri Lanka held today in Delhi. India won the toss and choose to bat first. India got 536 runs for 7 wickets in their first innings. Sri Lanka got 356 for 9 wicket loss in the end of 3rd day.

Trending Videos - 18 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 18, 2024