தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்..வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-12-14

3.7K Views

02:31

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் கடலில் இருந்தபடியே ருத்ரதாண்டவம் ஆடியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. புயலால் தென் தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.

தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பின. அப்போது கடலுக்கு சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனதோ என பதபதப்பில் உள்ள குடும்பத்தினர்.

புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமான ரப்பர் மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகவே தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.


Heavy rain at isolated places very likely over south coastal Tamilnadu said Indian meteorological center. National disasster management authority also warned for heavy rain.

Trending Videos - 3 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 3, 2024