உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி அளவீடு அதிகரிக்க வாய்ப்பு

By : Oneindia Tamil

Published On: 2018-01-17

168 Views

01:53

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதிக்கான ஒதுக்கீட்டை 10சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் போதுமான உணவு கிடைக்க செய்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தது. இதன்மூலம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய முடியும்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஒன்று முதல் மூன்று ரூபாய் வரையிலும் மானிய விலையில் உணவு தானியங்களை மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இதற்காக நடப்பு நிதி ஆண்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 1,45,338 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Current 2017-18 Fiscal the Central Government allocated Rs.1,45,338 crore for food subsidy bill. This will increase 10% coming budget for next fiscal year 2018-19, sources said

Trending Videos - 21 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 21, 2024