இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா.. ராஜேந்திர பாலாஜி

By : Oneindia Tamil

Published On: 2018-01-19

4.5K Views

00:51

யார் வேண்டுமானாலும் கடவுள்களை பற்றி அவதூறு சொல்ல இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார். கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தவறான கருத்துகள் இடம்பெற்று இருப்பதாக, இந்து அமைப்புகள் வைரமுத்துவிற்கு எதிராக போராடி வருகின்றன. இந்த பிரச்னை தற்போது பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது.

நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த் இப்போது கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது காலதாமதமான அறிவிப்பாகும். அ.தி.மு.க. மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. இந்த அரசை முழுமையாக ஆதரிக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வுக்கு எபோதும் எந்த பாதிப்பும் இல்லை. புதிதாக கட்சி தொடங்குவது தீபாவளி ரிலீஸ் படம் போல ஒரு மாதம் மட்டுமே ஓடக் கூடிய சினிமா போன்றது. ஆனால் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் போன்றது. எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று குறிப்பிட்டார். வைரமுத்து குறித்த கேள்விக்கு, ஆண்டாள் என்பவர் தமிழ்க் கடவுள். அவரை கோடிக்கணக்கானோர் வழிபட்டு வருகிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் கருத்து சொல்வது தவறு. மற்ற மதத்துக்கு எதிராக கருத்து எதுவும் சொல்லாமல் கவிஞர் வைரமுத்து இந்து மதத்துக்கு எதிராக பேசியது தவறாகும்.

TN Minister Rajendra Balaji questions Vairamuthu on Andal Issue. HE also added that Does Actor Kamalhassan having the will power to set up Local body infrastructure for his Party.

Trending Videos - 27 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 27, 2024