பேருந்து வேன் மோதல் ! இருவர் பலி- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-04-23

412 Views

01:09

அரசு பேருந்து மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்

கர்நாடக மாநிலத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் அசோக் என்பவர் நெய்காரபட்டி அம்மாபட்டியான் கோயிலில் கிடாவெட்டி விசேசம் வைத்துள்ளார் இதற்க்கு அவர் நன்பர்களை அழைத்துள்ளார்.ஆம்னி வேனில் கர்நாடகாவில் இருந்து10பேர் விசேசத்துக்கு வந்துள்ளனர்.இதில் நான்கு பேர் அதிக போதையில் இருந்ததால் அவர்களை நண்பர் வீட்டில் விட்டு விட்டு மீதமுள்ள ஆறு பேர் காரில் புறப்பட்டனர்.கந்தப்பகவுண்டன் வலசு அருகே சென்ற போது ஓட்டுநர் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்ப்பட்டது.இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சிறு காயம் ஏற்ப்பட்டது.பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் காரில் பயணம் செய்த மாதேஸ் 35 என்பவரும் அருன் 35 என்பவரும் சம்பவிடத்திலேயே இறந்துவிட்டனர்.சதிஷ் மற்றும் குமார்,பாட்ஷா ஆகியோர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் மற்றொருவர் எவ்வித காயமின்று உயிர் தப்பியுள்ளார்.
கார் அப்பளம் போல் நொருங்கி காணப்பட்டது.விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து கீரனூர் காவல் அதிகாரி புகழேந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

Trending Videos - 5 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 5, 2024