நகை பட்டறை உரிமையாளரை தாக்கி 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-07-20

1 Views

01:02

நகை பட்டறை உரிமையாளரை தாக்கிவிட்டு 20 லட்சம் மதிப்புள்ள 93 பவுன் தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்க திடலை சேர்ந்த சரவணன். இவர் நகை கடை பஜாரில் கடை வைத்துள்ளார். மதுரை சென்று நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரையிட்டு கொண்டு வருவது வழக்கம். அதே போல் நேற்று இரவு மதுரை சென்று 20 லட்சம் மதிப்புள்ள 93 பவுன் தங்க நகைகளை எடுத்து சென்று ஹால்மார்க் முத்தரை பதித்து கொண்டு மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அரசு பேருந்தில் வந்து வாகன நிறுத்தத்தில் இருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இரவு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது அவரை பின்தொடர்ந்து இரு சங்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் சங்க திடல் அருகே மதுபாட்டிலில் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 93 பவுன் தங்க நகைகளை மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர். காயம் பட்ட சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியான நிலையில் அங்கு வந்த தெற்கு போலீசார் தங்க நகை கொள்ளை சம்பவம் பல்வேறு கோணங்களில் விசாரனை செய்து வருகின்றனர்.

des: The golden jewelery worth Rs 20 lakh worth Rs 20 lakh has been investigated by the police.

Trending Videos - 4 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 4, 2024