ADMK Cadres Celebration, Edapadi palanisamy as CM of Tamilnadu- Oneindia Tamil

ADMK Cadres Celebration, Edapadi palanisamy as CM of Tamilnadu- Oneindia Tamil

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அதனை கொண்டாடி வருகின்றனர்.br br சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிலவி வந்த அசாதரண சூழ்நிலைக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பொறுப்பேற்க அழைத்துள்ளார். இதனை அதிமுக தொண்டர்கள் கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் கொண்டாடி வருகின்றனர்.br br அதிமுக ஓ. பன்னீர் செல்வம் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டு இருந்தது. சசிகலா ஆளுநரிடம் ஆட்சியமைக்க அழைப்பு விடுமாறு கோரியும் அவர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை உத்தரவானதும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.br அதன்பிறகு அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதையடுத்து ஆளுநர் அவரை ஆட்சி அழைக்க அழைப்பு விடுத்தார். ஒரு வார காலமாக காத்திருந்தவர்களுக்கு ஆளுநரின் இந்த அழைப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.இதனை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்த ஆட்சி, தமிழகத்தில் தொடரும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என தொண்டர்கள் சந்தோஷத்துடன் கூறினர்.br br Edapadi palanisamy is swearing as chief minister of Tamilnadu and Admk cadres celebrating it at their party office.


User: Oneindia Tamil

Views: 0

Uploaded: 2017-03-06

Duration: 03:22

Your Page Title