O.P.S Supporters Celebrated Sasikala Judgement-Oneindia Tamil

O.P.S Supporters Celebrated Sasikala Judgement-Oneindia Tamil

ஒரே நாளில் மாறிய காட்சிகள்.... கொண்டாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்br சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து, முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துத் தீர்ப்பை கொண்டாடினர்.br br சென்னை: சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அதிமுக தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் br ஆதரவாளர்களும்கொண்டாடினார்கள்.br br கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.br br இந்நிலையில் சசி அணி, முதல்வர் ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இன்று காலை 10.30மணிக்குத் தீர்ப்பு வெளியானதும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினரும் பொதுமக்களும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கொண்டாடினார்கள்.br br O.Panneer selvam's supporters of Admk celebrated Supreme court br verdict.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2017-03-06

Duration: 00:45

Your Page Title