இந்திய அணியில் புதியதாக இணைந்த சிராஜும், ஷ்ரேயேஸும் யார் இவர்கள் ? | ONEINDIA TAMIL

இந்திய அணியில் புதியதாக இணைந்த சிராஜும், ஷ்ரேயேஸும் யார் இவர்கள் ? | ONEINDIA TAMIL

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடிக் கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் முதல் டி-20 போட்டி வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் என்ற இரண்டு புதிய பிளேயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் செய்யக்கூடியவர்கள் ஆவர். br இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தற்போது ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் அடங்கிய சுற்றுத் தொடரில் விளையாடி வருகின்றது. ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த டி-20 தொடர் இந்த வருடத்தில் இந்தியா ஆட இருக்கும் கடைசி டி-20 தொடர் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. br br The squad for Indian cricket team against New Zealand t-20 match has been announced by BCCI. Shreyes Iyer and Mohammed Siraj got selected in the team for the first time.


User: Oneindia Tamil

Views: 549

Uploaded: 2017-10-24

Duration: 01:55

Your Page Title