கமல் ஹாஸன் ட்வீட்டை பாட்டுப்பாடி கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!- வீடியோ

கமல் ஹாஸன் ட்வீட்டை பாட்டுப்பாடி கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!- வீடியோ

கமல் ஹாஸன் சொல்லி எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலையில் இந்த அரசு இல்லை. அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து வருகிறது, என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். br br வட சென்னையில் எண்ணூர் கழிமுகத்தில் நில ஆக்கிரமிப்பு, கொசஸ்தலை ஆற்றில் கழிவைக் கொட்டுதல், நட்டாற்றில் எண்ணெய் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றைச் சுட்டிக் காட்டியுள்ள கமல் ஹாஸன், வரும் நாட்களில் கன மழை பெய்தால் வடசென்னை கடுமையாக பாதிக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். போதிய எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே தொடங்கவும் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார் தன் ட்விட்டர் பக்கத்தை. br br நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று தனது பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, கமலின் இந்த ட்விட்டை பாட்டுப் பாடி கிண்டலடித்தார்.


User: Oneindia Tamil

Views: 1.5K

Uploaded: 2017-10-27

Duration: 02:49