தமிழக மீனவர்கள் 13 பேர் கைது-வீடியோ

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது-வீடியோ

நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேருக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது . ராமநாதபுரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். br br இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் அவர்களது ஒரு படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர். br br மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் 16ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


User: Oneindia Tamil

Views: 126

Uploaded: 2017-11-02

Duration: 00:56

Your Page Title