கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ

கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ

சென்னை விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சென்னை மெரினா கடற்கரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. br br இந்நிலையில் சென்னையின் பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் கடல்போலவே காட்சியளிக்கிறது. கடற்கரையே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. br br Flooded in Chennai marina coastal area.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2017-11-03

Duration: 01:50

Your Page Title