கடைசி வரை காத்திருந்தும் புதுசாக ஒன்றுமே சொல்லலையே கமல் ஹாஸன்! | Filmibeat tamil

கடைசி வரை காத்திருந்தும் புதுசாக ஒன்றுமே சொல்லலையே கமல் ஹாஸன்! | Filmibeat tamil

தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் கமலஹாசன் தனது பிறந்த நாளையொட்டி முக்கியமான முடிவை அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். கடந்த பல நாட்களாக ஊடகங்களும் கமல் பற்றிய செய்திகளுக்கே முதலிடம் கொடுத்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தி.நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரம் தவறாமையும், நிர்வாக ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு ட்விட்டரில் போதனை செய்து வந்த கமல் ஹாசன் இரண்டு மணி நேரம் தாமதமாகவே பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். தேர்தல் களத்தில் புதியவர்களுக்கே வாய்ப்பு என்பது கமல் கொடுத்த இன்னொரு வாக்குறுதி. வாய்ப்பு கொடுக்கப்படும் புதியவர்கள் தவறு செய்தால் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறு செய்யாததால் தான் நாடு நாசமாகி கொண்டிருக்கிறது என்றார் அழுத்தமாக. br br In his birthday presss meet, Kamal Haasan hasn't announced any new things and repeated his old announcements.


User: Filmibeat Tamil

Views: 436

Uploaded: 2017-11-07

Duration: 02:20