சென்னைக்கு இந்திய வானிலை மையம் வார்னிங்!- வீடியோ

சென்னைக்கு இந்திய வானிலை மையம் வார்னிங்!- வீடியோ

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் பெரும்பாலும் நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். br br இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் மழையில்லை. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்ததால் சென்னையில் பெய்து வந்த மழையும் மறைந்துவிட்டது.இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. br br Thunderstorm accompanied with lightning at isolated places very likely over Tamilnadu.


User: Oneindia Tamil

Views: 28.9K

Uploaded: 2017-11-09

Duration: 01:51

Your Page Title