அந்த குறும்படத்திற்கே ஷாக் ஆகுறீங்களே...வீடியோ

அந்த குறும்படத்திற்கே ஷாக் ஆகுறீங்களே...வீடியோ

'லக்‌ஷ்மி' என்ற குறும்படம் சமூக வலைத்தளங்களில் மக்களால் பெருமளவுக்கு விவாதத்தை கிளப்பியிருந்தது.இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி ப்ரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவரது குடும்ப பாங்கான கேரக்டர், பிற ஆடவன் புகழும்போது முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் போன்றவை இவரை ஒரு தேர்ந்த நடிகையாக வெளிக்காட்டியுள்ளது. இந்த குறும்படத்தில் லட்சுமி போல்ட்டான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கடும் விமர்சனங்கள் வரும் என தெரிந்தே எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் லட்சுமியை விட்டால் வேறு நடிகை நடித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். வேறு ஆடவனுடன் உறவு வைப்பதோடு, அதை தொடரப்போவதாக கணவனிடம் மறைமுகமாக சொல்லி அந்த குறும்படம் நிறைவு செய்யப்பட்டது. அவரது கணவருடன் உடலுறவு செய்யும் காட்சிகளை தயக்கமின்றி இவர் செய்திருந்தார். அப்போதும் முகத்தில் பல எக்ஷ்பிரஷன்ஸ்களை அவர் காட்டியிருந்தார். இதுபோன்ற காட்சி குறும்படத்தில் இடம் பெற்றது மிகப்பெரிய கட்டுடைத்தலாக வர்ணிக்கப்படுகிறது.


User: Oneindia Tamil

Views: 24

Uploaded: 2017-11-11

Duration: 01:51