அரசியல் களத்துக்கே வராத ரஜினி- கமல்...வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-11-14

11.6K Views

01:47

அரசியல் களத்துக்கு இன்னமும் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் வராத நிலையில் திரைமறைவில் இருவருமே விசில் சின்னத்துக்காக மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டனர். இந்த பஞ்சாயத்துக்கு டெல்லியும் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை... போர் வரும்போது பார்த்து கொள்வோம் என அரசியலுக்கு வருவதை அறிவித்தார்.
உடனே கமல்ஹாசனும் நான் எப்போதே சிஸ்டம் சரியில்லை என சொன்னவன்; எப்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார். அத்துடன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் விறுவிறுவென தீவிர அரசியலை முன்னெடுத்தார். ஆனால் ரஜினிகாந்தோ அமைதிகாக்கத் தொடங்கினார்.

திமுக முரசொலி பவளவிழாவில் பேசிய கமல்ஹாசன், தற்காப்புக்கான அரசியல் கூடாது என ரஜினிகாந்தைச் சாடினார். இதற்கு சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெற என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியாது; அதை எனக்கு கமல்ஹாசன் சொல்லவும் மறுத்து என்னோடு வா என்கிறார் என்றார்.

Sources said that Actors Rajinikanth and Kamal Haasan are fighting for the whistle symbol.

Trending Videos - 5 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 5, 2024