ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய பாகுபலி

ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய பாகுபலி

ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆந்திர அரசின் 13 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. br br ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கப்படாமல் இருந்தது. br br இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது. br br இதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது. br br சிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் - நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணி பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. br br 2015-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவுக்கும், 2014-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலிக்கும் வழங்கப்படுகிறது. br br திரைப்படத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் என்.டி.ஆர். தேசிய விருது கமல்ஹாசன் (2014), ரஜினிகாந்த் (2016) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.


User: Maalaimalar

Views: 6

Uploaded: 2017-11-16

Duration: 01:12