தீரன் அதிகாரம் ஒன்று.. அடிக்கலாம் ஒரு சல்யூட்!- வீடியோ

தீரன் அதிகாரம் ஒன்று.. அடிக்கலாம் ஒரு சல்யூட்!- வீடியோ

கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் சதுரங்க வேட்டை எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று. சிறுத்தை படத்திற்கு பின் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்ற காரணங்களால் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. 1995 முதல் 2007 வரை இந்தியா முழுக்க கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. தனியாக இருக்கும் வீடுகளில் கதவை உடைத்தோ, உதவி கேட்பது போலவோ உள்ளே புகுந்து வீட்டில் இருக்கும் அனைவரையுமே கொடூரமாக கொன்று கொள்ளை அடிக்கும் கும்பல் நாடு முழுக்க தங்கள் கைவரிசையை காட்டி மிரட்டியது. அந்த கும்பலை தமிழ்நாட்டு காவல்துறை சுற்றி வளைத்து சாதனை புரிந்ததுதான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை.


User: Filmibeat Tamil

Views: 37

Uploaded: 2017-11-17

Duration: 02:28