மீண்டும் ஒரு கந்துவட்டி பயங்கரம்... தேனியில் 4 பேர் தற்கொலை முயற்சி!- வீடியோ

மீண்டும் ஒரு கந்துவட்டி பயங்கரம்... தேனியில் 4 பேர் தற்கொலை முயற்சி!- வீடியோ

தேனி அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாரியம்மன்கோவில்பட்டியில் சரவணன், சுதா தம்பதி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தியுள்ளனர். சரவணனின் மகள்கள் வைஷாலி, வைஷ்ணவிக்கு முறையே 14 மற்றும் 12 வயதாகிறது. சரவணன் குடும்ப பிரச்னைக்காகவும், தொழில் முதலீட்டிற்காகவும் கந்துவட்டி கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமை அதிகரித்த நிலையில் சரவணன் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்து வீட்டார் 4 பேரையும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. br br தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்து ஆடுவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சியினர், காவல்துறையினரை கையில் வைத்துக் கொண்டு கந்துவட்டிக் கும்பல் மக்களை ஏமாற்றி அதிக வட்டிக்கு பணம் வசூலித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். br சரவணன் குடும்பத்தினரின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சரவணன் குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2017-11-22

Duration: 01:55

Your Page Title