குஜராத்தில் பாஜக நிலைமை படுமோசம்?-முதல்வர் விஜய் ரூபானி வைரல் ஆடியோவால் பரபரப்பு- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-11-29

3.9K Views

01:32

குஜராத்தின், வத்வான் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை, முதல்வர் விஜய் ரூபானி போனில் தொடர்பு கொண்டு, வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டதோடு, குஜராத்தில் பாஜக நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறியதாக, ஒரு ஆடியோ, வைரலாகியுள்ளது.
அந்த ஆடியோ போலியானது என, ஒருபக்கம் மறுப்பு குரல்கள் வந்தாலும், வத்வான் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்த, 5 வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு போன்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள், குஜராத்தின் பெரும்பாலான மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து கொடுத்துள்ளன. குறிப்பாக வணிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஆளும் பாஜக இம்முறை சட்டசபை தேர்தலை கடும் சவாலோடு எதிர்கொள்கிறது.

5 Jain candidates, who had filed nomination as Independents from Wadhwan constituency, are said to have withdrawn, after an audio clip of a purported conversation between one of the Independent candidates and CM Vijay Rupani asking him to withdraw his nomination went viral.

Trending Videos - 6 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 6, 2024