ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... இன்னொரு படத்திலும் கமிட்டான முத்த நடிகை!- வீடியோ

ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... இன்னொரு படத்திலும் கமிட்டான முத்த நடிகை!- வீடியோ

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே தற்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100 காதல்' படத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். இந்நிலையில், தற்போது ஜீவா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஷாலினி பாண்டே. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே, 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்காக தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி படக்குழுவையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தினார். முதல் படமான 'அர்ஜுன் ரெட்டி'-யில் பல முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். 'அர்ஜுன் ரெட்டி' வெற்றிபெற்றதையடுத்து தமிழில் சந்திரமௌலி இயக்கும் '1௦௦ காதல்' என்கிற படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். லாவண்யா திரிபாதி சில காரணங்களால் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாகத்தான் ஷாலினி இந்தப் படத்தில் நடிக்க வந்தார். br br Shalini Pandey, who has acted in 'Arjun Reddy', is currently plays the heroine role in '100 Kaadhal' in Tamil. She is noew committed in jiiva's next film.


User: Filmibeat Tamil

Views: 1

Uploaded: 2017-12-01

Duration: 01:38