ஆர்.கே.நகரில் ஒரு சிக்கல்.. திமுகவிடமிருந்து அதிமுகவுக்குத் தாவத் தயாராகும் ஜாதி வாக்குகள்- வீடியோ

ஆர்.கே.நகரில் ஒரு சிக்கல்.. திமுகவிடமிருந்து அதிமுகவுக்குத் தாவத் தயாராகும் ஜாதி வாக்குகள்- வீடியோ

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக ஆதரவு ஜாதி வாக்குகளை தங்கள் பக்கம் வளைத்துப் போடுவதில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. br ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் நாளுக்குநாள் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.கவுக்கான வாக்குகளைப் பிரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறது ஆளும் அதிமுக. br இரட்டை இலை சின்னம் கைக்கு வந்த பிறகு, தமது தலைமைக்கு கிடைத்த சவாலாக ஆர்.கே.நகர் தேர்தலைக் கருதுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கேற்ப, தொகுதி நிலவர அறிக்கையை நாள்தோறும் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து கேட்டு அறிகிறார். br br இன்னும் ஒருசில நாட்களில் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில், தி.மு.கவுக்கு ஆதரவாக, எதிராக இருக்கும் ஜாதி அமைப்புகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது அதிமுக டீம். br அந்த டீமிடம் பேசிய சமுதாய தலைவர்கள் சிலர், தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தார் சற்குண பாண்டியன். அவர் இறந்தபிறகு, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தைத் தூண்டிவிட்டதில் முக்கிய பங்கு வகித்த சசிகலா கோஷ்டி மீதுள்ள கோபத்தால் தி.மு.கவுக்கு ஓட்டு போட்டு வந்தோம்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2017-12-06

Duration: 02:01

Your Page Title