மைசூரு மன்னர் குடும்பத்தில் ஆண் குழந்தை.. 400 வருட சாபம் முடிவுக்கு வந்தது !- வீடியோ

மைசூரு மன்னர் குடும்பத்தில் ஆண் குழந்தை.. 400 வருட சாபம் முடிவுக்கு வந்தது !- வீடியோ

மைசூரு மன்னர் குடும்பத்தில் புதிதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த குடும்பத்தின் மீது இருந்த சாபம் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 400 வருடங்களாக அந்த குடும்பத்தில் ஆண் வாரிசே இல்லை. இது முன்பொரு காலத்தில் கொடுக்கப்பட்ட சாபம் காரணமாகவே நடந்தது என்று கூறப்பட்டது. தற்போது இந்த ஆண்குழந்தை காரணமாக அந்த குடும்பமே சந்தோசத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். அந்த குழந்தையை குடும்பமே தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். br br விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த திருமலைராஜா 1612ம் ஆண்டு மைசூர் நகரத்தை நிலையாக ஆண்டு கொண்டு இருந்தார். ராஜா உடையார் என்பவர் இவர் மீது போர் தொடுத்து அவரது ஆட்சியை கைப்பற்றினார். அந்த ராஜாவுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள், வேலையாட்கள் எல்லோரும் அரசவையில் இருந்து நீக்கப்பட்டார்கள். மொத்தமாக ஆட்சி அமைப்பே அதன்பின் மாற்றப்பட்டது. br இந்த நிலையில் திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா அதே போரின் போது யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தில் இருந்து ஓடி சென்றுள்ளார். மேலும் அவர் ராஜ நகைகள், செப்பு தகடுகளுடன் மறைத்ததாக கூறப்படுகிறது.


User: Oneindia Tamil

Views: 7

Uploaded: 2017-12-07

Duration: 00:16