ஊரே அழிந்த பின்பும் தனியாக வாழும் 90 வயது தாத்தா..வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-12-11

4.9K Views

04:50

அமெரிக்கவிற்கு பக்கத்தில் இருக்கும் மிகச்சிறிய தீவுதான் பியூர்டாரிகோ. இங்கு கடந்த சில மாதங்களாக மாறி மாறி புயல் வீசி வருகிறது. இதனால் தற்போது அந்த தீவின் முக்கால்வாசி பகுதி அழிந்து போய் இருக்கிறது. அந்த சிறிய தீவை விட்டு எல்லா மக்களும் வெளியேறிவிட்டார்கள். இந்த நிலையில் அந்த தீவை விட்டு வெளியே வரமாட்டேன் என்று 90 வயது நிரம்பிய 'அலிஜான்ரோ லா லுஸ் ரிவரா' என்ற நபர் தெரிவித்து இருக்கிறார். மேலும் புயலுக்கும் கொடூரமான இடிபாடுகளுக்கும் இடையிலும் அவர் தில்லாக வசித்து வருகிறார். தற்போது அமெரிக்கா முழுக்க அவரது ஊர் பாசம் வைரல் ஆகியுள்ளது.

பியூர்டாரிகோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இர்மா' என்ற புயல் வந்தது. இந்த புயல் காரணமாக பியூர்டாரிகோ பகுதியில் அமெரிக்க அரசாங்கம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. அதன்பின் தற்போது மீண்டும் அங்கு 'மரியா' என்ற புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக அங்கு இருந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அந்த தீவைவிட்டு நிறைய மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

இந்த மரியா புயல் காரணமாக அங்கு நிறைய சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் 1,500க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவில் இருக்கும் 90 சதவிகிதமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அங்கு இருந்த மக்கள் அனைவரும் நியூயார்க், கலிபோர்னியா, பென்சில்வேனியா என அமெரிக்காவின் மாகாணங்களில் குடியேறி வருகிறார்கள்.





y A 90 year old man named Alejandro La Luz Rivera lives in Puerto Rica hasn't left home after hurricane. The whole island has left the city and took new residence in New York and some other places. The only man living in that city is Alejandro La Luz Rivera.

Trending Videos - 17 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 17, 2024