இலவச திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் கிடையாது- சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு- வீடியோ

இலவச திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் கிடையாது- சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு- வீடியோ

மக்களுக்கு விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை இணைக்கலாம். நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது. br br கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பொருளாதாரம் ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதை தடுத்து பொருளாதாரத்தை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவும் பணவீக்க விகிதத்தை ஒரே சீராக வைத்திருக்கவும் முந்தைய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டு காங்கிரஸ் அரசினால் 2005ம் ஆண்டு ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான் பணமோசடி தடுப்புச் சட்டம்(Prevention of Money-Laundering Act). br br The Constitution Bench extended the deadline for mobile phone-Aadhaar linkage from February 6, 2018 to March 31, 2018.


User: Oneindia Tamil

Views: 2K

Uploaded: 2017-12-15

Duration: 03:06

Your Page Title