அருவி இயக்குனர் வேறு யாருமல்ல, நம்ம 'அண்ணாமலை' மருமகன்தான்- வீடியோ

அருவி இயக்குனர் வேறு யாருமல்ல, நம்ம 'அண்ணாமலை' மருமகன்தான்- வீடியோ

இயக்குனர் அருண் பிரபு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ளவர். அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஓய்வின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் கூட்டம், சமூக வலைதளங்களில் பாராட்டு என்று அருவி சரியான பாதையில் தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. அருவி பட இயக்குனரின் முகத்தை பார்த்தவர்களுக்கு அவர் புதுமுகமாகவே தெரியவில்லை. br br இந்த பையன் அருண் பிரபுவை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்குது. புதுமுகமாக தெரியவில்லையே என்று பலர் நினைக்கிறார்கள். நீங்கள் நினைப்பது மிகச் சரியே. அவர் ஒன்றும் உங்களுக்கு தெரியாதவர் அல்ல. br br ராதிகா சரத்குமார் நடித்த அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சிவக்குமாரின் மகனாக நடித்தவர் தான் இந்த அருண் பிரபு. அவர் அண்ணாமலை தவிர்த்து பிற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். br br சிறு வயதில் இருந்தே கேமராவுக்கு முன்பு இருந்த அருண் பிரபு தற்போது கேமராவுக்கு பின்னால் சென்றுள்ளார். கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். br br Aruvi director Arun Prabhu is not a new face. He has acted in many Television serials including Radhika Sarathkumar's Annamalai. Arun Prabhu has got appreciation from the popular faces of the film industry.


User: Filmibeat Tamil

Views: 5

Uploaded: 2017-12-21

Duration: 01:29

Your Page Title