தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றார் ரஜினிகாந்த்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-01-04

12 Views

01:36

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இதனையடுத்து புத்தாண்டன்று அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் பதிவு செய்வதற்காக இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த பிறகு, நேற்று ஊடகத்தினரை சந்தித்து ரஜினி பேசினார். அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரஜினி படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவர் சென்னை ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று சுவாமி கவுதமானந்தாவை சந்தித்தார். ரஜினியின் இந்த சந்திப்பு ஆன்மிக அரசியல் என்பதை ஒட்டியே இருப்பதாக பார்க்கப்பட்டது.
அரசியலுக்கு வரும் முடிவை எடுத்த பிறகு அரசியல் ஆலோசகர்களை தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து கலந்துரையாடி வந்தார் ரஜினி. இந்நிலையில் இன்று முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததார். அவருடைய முதல் அரசியல் கட்சி தலைவரின் சந்திப்பு இது.

Actor turned Politician Rajinikanth says he is visiting Karunanidhi to wish him for New year and says he is a good friend of him.

Trending Videos - 6 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 6, 2024