தினகரனை நம்பி ஏமாந்து விட்டோமோ என்ற கலக்கத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்- வீடியோ

தினகரனை நம்பி ஏமாந்து விட்டோமோ என்ற கலக்கத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்- வீடியோ

ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ. தினகரன் தனிக்கட்சி தொடங்கடும் சூழ்நிலை உருவாகிவிட்டது..அப்படி உருவானால் ஆட்சிக்கு பிரச்சனையே இல்லை என காத்திருக்கிறார்களாம் முதல்வர் எடப்பாடியார் ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தினகரன் மட்டும் எம்.எல்.ஏ.வாகிவிட்ட நிலையில் தங்களது பதவி பறிபோய்விட்டதே என தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் புலம்பி வருகின்றனராம். br br அ.தி.மு.க அரசுக்கு எதிராக தினகரனால் எதுவும் செய்ய முடியாத சூழல் உருவாகிவிட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சியே கையில் வந்துவிடுவதைப் போலப் பேசினார் தினகரன். br br அவரைத் திட்டமிட்டு ஒதுக்கிவிட்டார் முதல்வர். உள்ளாட்சி தேர்தலுக்குள் அவர் தனிக்கட்சி தொடங்கினால்தான் பிழைக்க முடியும்' என்கின்றனர் அமைச்சர்கள். br br சட்டமன்றத்தில் தனி நபராக அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார் தினகரன். அவருக்குப் பேச வாய்ப்பளிக்காததால், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பேரவைக்கு வெளியே பேசும்போதும், சட்டசபைக்குள் நுழையும்போது இரண்டு எம்.எல்.ஏக்கள் என்னைப் பார்த்ததும் பதறிப் போய் ஓடினார்கள். யாரும் பார்க்காத நேரத்தில், ஒரு அமைச்சர் எனக்கு வணக்கம் வைத்தார்' எனக் கொளுத்திப் போட்டார். br br Sources said that the Disqualified AIADMK MLAs very upset over the RK Nagar MLA Dinakaran.


User: Oneindia Tamil

Views: 15.2K

Uploaded: 2018-01-10

Duration: 02:36

Your Page Title