ஜி.எஸ்.டி.க்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்திய ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிலாளர் பிரிவு

ஜி.எஸ்.டி.க்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்திய ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிலாளர் பிரிவு

ஜிஎஸ்டி வரி விதிப்பால் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவு அமைப்பான மஸ்தூர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில், சமீபத்தில் அந்த அமைப்பின் பேரணி நடைபெற்றது. தொழிலாளர் விரோத கொள்கைகளை பாஜக பின்பற்றுவதாக குற்றம்சாட்டிதான் இந்த பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர். br br அப்போது பேசிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரிஜேஷ் உபாத்யாய் கூறுகையில், "அனைத்தும் ஒரே அளவுகோலை கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாாதாரம் அப்படிப்பட்டது கிடையாது. ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு வகையானவை. அதை தனித்தனியாகத்தான் பரிசீலிக்க வேண்டும். ஜிஎஸ்டி நடைமுறையை அரசு அகற்றினால்தான் சிறு தொழில் மற்றும் விவசாயத்துறை வளர்ச்சியடையும்" என்றார். br br மஸ்தர் சங்கம் என்பது நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிலாளர் சங்கங்களில் ஒன்றாகும். இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது பாஜகவின் தாய் அமைப்பு என அழைக்கப்படுவது. அப்படியிருந்தும், ஜிஎஸ்டிக்கு எதிராக மஸ்தூர் சங்கம் பேரணி நடத்தியுள்ளது. இது ஆர்எஸ்எஸ் அனுமதியில்லாமல் நடந்திருக்காது என்றே தெரிகிறது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-01-15

Duration: 01:40