துணை முதல்வர் என்ற பதவியே அரசியல் சாசனத்தில் கிடையாதே ? உயர்நீதிமன்றம் கருத்து

துணை முதல்வர் என்ற பதவியே அரசியல் சாசனத்தில் கிடையாதே ? உயர்நீதிமன்றம் கருத்து

துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2017 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக இவர்கள் வாக்களித்தனர். br br எதிர்த்து வாக்களித்த இவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இன்று ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் விசாரணை நடைபெற்றபோது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். br br அப்போது எதிர்த்து வாக்களித்த பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமாக செயல்படும் அரசு என சரமாரியாக குற்றம்சாட்டினார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-01-17

Duration: 01:23

Your Page Title