தனது தோழியின் திருமணத்தில் ஆலியா பட் போட்ட ஆட்டம்- வீடியோ

தனது தோழியின் திருமணத்தில் ஆலியா பட் போட்ட ஆட்டம்- வீடியோ

இதுவரை பாலிவுட் அழகி ஆலியா பட்டின் அழகான பல்வேறு லுக்ஸ்களை பார்த்திருப்போம். இந்நிலையில் ஆலியாவின் நெருங்கிய தோழியான க்ரிபா மெஹ்தாவின் திருமணம் ஜோத்பூரில் நடந்திருக்கிறது. அங்கு மணமகளுடன் மணமகளின் தோழியான ஆலியாவின் ஸ்டைல் மற்றும் லுக் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது. இவர்களோடு தோழி அகன்ஷா ரஞ்சனும் சேர்ந்து செய்த லூட்டிகள் எல்லாம் தங்களது சமூகவலைதளத்தில் பகிர பயங்கர வைரலாய் பரவியிருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்களின் திருமணத்திற்கு சென்றால் எப்படி உடையணியவேண்டும் என்பதிலிருந்து எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றும் சொல்லியிருக்கிறார் ஆலியா. br br இங்கே பேச்சுலர் பார்ட்டி எல்லாம் சர்வ சாதரணம். திருமணத்திற்கு முந்தைய நாள் ஆட்டம் பாட்டத்துடன் இந்த விழா கண்டிப்பாக நடந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த நிகழ்ச்சிக்கு ஆலியா ஃப்ளோரல் கவுன் அணிந்திருந்தார். மணமகளுடன் சேர்ந்திருக்கும் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இரண்டு அழகிகளையும் வைத்து எடுக்கப்பட்ட ஃப்ரேம் கூட அவ்வளவு கச்சிதமாக இருந்தது. சிம்பிளான மேக்கபில் வசீகரித்தார் ஆலியா. br br ப்ரைட் மஞ்சள் நிறத்திலான ஃபுல் ஸ்லீவ் சல்வார் அணிந்திருந்தார். இது ஆலியாவின் நிறத்தை தூக்கிக் காட்டும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக டாங்லிங் தொடு மற்றும் சிறிய கருப்பு நிற பொட்டு அவ்வளவு பொருத்தம்.


User: Filmibeat Tamil

Views: 5.4K

Uploaded: 2018-01-23

Duration: 02:49

Your Page Title