தங்கமணி, ஸ்டாலினுடன் தொடர்பில் உள்ளார்-முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி- வீடியோ

தங்கமணி, ஸ்டாலினுடன் தொடர்பில் உள்ளார்-முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி- வீடியோ

பஸ் கட்டண உயர்வை கண்டித்து, தினகரன் அறிவிப்புக்கு பிறகு, போராட்டம் நடத்தப்படும்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். br br கரூரில், அமைச்சர்களாக உள்ள தங்கமணி, காமராஜ், உதயகுமார் ஆகியோர், தினகரனை பற்றி புகழ்ந்தவர்கள் தான். தற்போது, அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள, மாற்றிப் பேசுகின்றனர். தங்கமணி, ஸ்டாலினுடன் தொடர்பில் உள்ளார் என்பதற்கு, போட்டோ ஆதாரம் உள்ளது. அரசு விழாவில், தினகரன் மாமியார் வீட்டுக்கு போவார் என, முதல்வர் பழனிசாமி பேசுவது, அவர் பதவிக்கு அழகு இல்லை. ஜெயலலிதா கொள்கைக்கு எதிராக, முதல்வர் பழனிசாமி மத்திய அரசிடம் அடங்கிப் போய்விட்டார். இந்த ஆட்சி, ஒரு மாதத்தில் கவிழும். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால், தமிழக அரசுக்கு கிடைத்த நிதி, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும். பஸ் கட்டண உயர்வை எதிர்த்து, மாணவர்கள் போராடத் துவங்கி விட்டனர். ஆனால், கட்டண உயர்வை திரும்பப் பெறாமல், தமிழக அரசு கொள்ளையடிக்கும் அரசாக மாறி விட்டது. ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து விட்டார்கள் என, முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுவது பதவிக்காகத்தான். பஸ் கட்டண உயர்வு குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சரின் பேச்சு ஆணவத்தனமாக உள்ளது.


User: Oneindia Tamil

Views: 456

Uploaded: 2018-01-23

Duration: 03:07

Your Page Title