வலுக்கும் மாணவர்கள் போராட்டம்… புரட்சி வெடிக்கும் அபாயம்…வீடியோ

வலுக்கும் மாணவர்கள் போராட்டம்… புரட்சி வெடிக்கும் அபாயம்…வீடியோ

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மூன்றாவது நாளாக தமிழகம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் br br தமிழக அரசு கடந்த வாரம் பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியது நகர மாநகர பேருந்து கட்டணம் மட்டும் இல்லாம் வெளியூர் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தபட்டது . இதனால் பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினார்கள் சாதாரணமாக ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் பேருந்து பயணத்தில் செலவாவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . தீடிரென அறிவித்த பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் ராமநாதபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .மூன்றாவது நாளாக இன்றும் தஞ்சை கும்பகோணம் சென்னை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் பேருந்துகளை வழிமறித்தும் சாலை மறியலில் ஈடுபட்டும் வருகின்றனர் . இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .


User: Oneindia Tamil

Views: 190

Uploaded: 2018-01-24

Duration: 03:04