விஜயேந்திரரை மன்னிக்கலாமா? பாரதிராஜா கொந்தளிப்பு- வீடியோ

விஜயேந்திரரை மன்னிக்கலாமா? பாரதிராஜா கொந்தளிப்பு- வீடியோ

தமிழ்ச் சோற்றை சாப்பிட்டுவிட்டு தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரை மன்னிக்கலாமா? என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாரதிராஜா வெளியிட்ட ஆடியோ ஒலிப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் மொழியும் இனமும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? என சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகா, கர்நாடகமாகவே இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். br தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகிற வாழ்க்கைக்கே தடை என தமிழன் தன்னுடைய தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் அவலம் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. br ஆண்டாளைப் பற்றி பேசிய கவிஞர் வைரமுத்துவை அநாகரிகமாக பேசிய மதவாதிகளே கொஞ்சம் யோசியுங்கள்! இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. குரல் கொடுப்பீர்களா? தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன். அந்த செம்மொழியை, மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? br br br br br br Director Bharathiraja has condemned Kanchi Mutt seer Vijayendrar on Tamilanthem row.


User: Oneindia Tamil

Views: 737

Uploaded: 2018-01-25

Duration: 04:09