பாதாளத்திற்கு செல்லும் பாஜகவின் செல்வாக்கு....விரைவிலேயே தேர்தல் ?- Oneindia Tamil

பாதாளத்திற்கு செல்லும் பாஜகவின் செல்வாக்கு....விரைவிலேயே தேர்தல் ?- Oneindia Tamil

பாஜகவின் செல்வாக்கு படுவேகமாக சரிவதால் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமே லோக்சபா தேர்தலை நடத்துவது குறித்து பாஜக திடீரென ஆலோசனை நடத்த தொடங்கியிருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி மத்தியில் வலிமையாக உட்கார்ந்தது. வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. அதிமுக இந்தியாவின் 3-வது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. br br ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் பாஜகவின் வெறுப்பு அரசியல், வன்முறை வியூகங்களால் மக்கள் மிகவும் உச்சகட்ட அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவால் கனவிலும் காலே ஊன்ற முடியாத அளவுக்கு துரோகத்தை செய்து வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது. br br 5 முறை வென்ற குஜராத் சட்டசபை தேர்தலிலும் கூட 'மரண பயத்தை' பார்த்தது பாஜக. இனி வரப்போகிற கர்நாடகா சட்டசபை தேர்தலில் நிலைமை படுகேவலமாகத்தான் இருக்கும் என்பதை பாஜக உணர்ந்தே இருக்கிறது.


User: Oneindia Tamil

Views: 8.9K

Uploaded: 2018-01-25

Duration: 01:36