வழக்கம் போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே லாபம் தரும் பட்ஜெட்!- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-02-01

12.4K Views

02:11

மத்திய பொது பட்ஜெட் தேர்தல் பட்ஜெட்டாக இல்லாமல் கிராமப்புற மக்களை குறி வைத்து அவர்களை ஈர்க்கும் பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. சாமானியர்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவும் வழக்கம் போலவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் தரும் பட்ஜெட்டாகவே மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பானது உயர்த்தப்படவில்லை இது மாத ஊதியம் பெருவோருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை வருவாய் அடிப்படையில் பிரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு. ரூ. 250 கோடி வரை வருவாயுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் இருக்கும் என்பதோடு நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.மருத்துவம் மற்றம் போக்குவரத்து செலவினங்களில் மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரிக்கழிவு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாத ஊதியம் பெறுவோருக்கான நிரந்தர வரிக்கழிவு ரூ. 40 ஆயிரமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




2018-19 Union budget not much beneficiary to normal citizen as usual budget benefits the Corporte companies, experts accusing that the health care system also not for benefiting poor because it will be given to corporate companies.

Trending Videos - 8 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 8, 2024