இரண்டு மாதத்தில் மூன்று படம் பண்ணும் சித்தார்த்!- வீடியோ

இரண்டு மாதத்தில் மூன்று படம் பண்ணும் சித்தார்த்!- வீடியோ

பொதுவாக ஒரு நடிகர் வருடத்திற்கு இரண்டு படம் அல்லது ஒரு படம் என்கிற கணக்கில்தான் கால்ஷீட் கொடுப்பார்கள். சிலர் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை என்ற கணக்கும் வைத்திருக்கிறார்கள். முதல் முறையாக அந்த ரூட்டை மாற்றியிருக்கிறார் நசிகர் சித்தார்த். எப்படி? வைபவ் நடிப்பில் 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்திக்.ஜி யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சித்தார்த். அதன் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இந்தப் படத்திற்கு சித்தார்த் இருபது நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆக, இரண்டு மாதத்தில் மூன்று படம். வழக்கமாக வாங்கும் சம்பளம் இல்லாமல் கொடுத்த தேதிக்கேற்ப சம்பளத்தையும் குறைத்து வாங்கியிருக்கிறார்! நல்ல கதைகளை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக இந்த முடிவாம்.


User: Filmibeat Tamil

Views: 958

Uploaded: 2018-02-28

Duration: 01:20