இடைத்தேர்தல்களில் சறுக்கிய பாஜக- வீடியோ

இடைத்தேர்தல்களில் சறுக்கிய பாஜக- வீடியோ

உத்திரபிரதேச மாநிலத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் 71 தொகுதிகளை வென்ற பாஜகவிற்கு 2018ல் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் தோல்வியை பரிசளித்துள்ளனர் மக்கள். இடைத்தேர்தலிலேயே இப்படி என்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி அலை இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன தேர்தல் முடிவுகள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் அந்தக் கட்சியினர் சொல்லி வந்த விஷயம் நாடு முழுவதும் மோடி அலை பரவுகிறது என்பது தான். மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.


User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2018-03-14

Duration: 01:47