மலை பயிற்சிக்கு தடை...குரங்கனி விபத்து எதிரொலி...வீடியோ

மலை பயிற்சிக்கு தடை...குரங்கனி விபத்து எதிரொலி...வீடியோ

br தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் மலையேறும் பயிற்சி மேற்கொள்வதற்கான விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஏற்காடு குண்டூர் ஆனைவாரி முட்டல் வழுக்குப்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மலையேறும் பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது கோடை காலம் முடியும்வரை சேலம் மாவட்டத்தில் மலையேறும் பயிற்சி மேற்கொள்வதற்கும், விலங்கு மற்றும் பறவைகளை காண்பதற்காக சூழல் சுற்றுலா மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும், மலைப்பகுதிகளில் தீ பரவக்கூடிய வகையில் யாரேனும் நடந்து கொண்டால்அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது கோடை காலத்தில் வனப்பகுதிகளில் இரவு பகலாக ரோந்து மேற்கொள்ளவும் வனதுறையினருக்கு உத்தரவிட்ப்பட்டுள்ளது கிராம வனக்குழுக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு தீத்தடுப்பு பணிக்காக அவர்களது ஒத்துழைப்பையும் பயன்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


User: Oneindia Tamil

Views: 11

Uploaded: 2018-03-14

Duration: 01:03