காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அவசர செயற்குழு கூட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அவசர செயற்குழு கூட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடத்த திமுக அவசர செயற்குழு அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், ஏற்கனவே திமுக அறிவித்தபடி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு அக்கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. br br The DMK Emergency Executive Committee meeting headed by its acting chief MK Stalin to be held today for the issue of Cauvery.


User: Oneindia Tamil

Views: 738

Uploaded: 2018-03-30

Duration: 01:44

Your Page Title