எச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கு- வீடியோ

எச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கு- வீடியோ

ஈரோடு திமுக தலைவர் கலைஞரின் குடும்பம் பற்றி டுவிட்டரில் அவதூறு செய்தி பதிவிட்ட பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி தெற்கு மாவட்ட . திமுக நிர்வாகிகள் சார்பில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர் br br br br தி மு க தலைவர் கலைஞரின் குடும்பம் பற்றி அவதூறான செய்திகளை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் இதனால் திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதனை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ராஜாவின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ந்த வண்ணம் உள்ளது இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய எச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் பலமுறை அவதூறு பதிவுகளைசெய்து நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறார் எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநிலஆதிதிராவிடர் நலக் குழு செயலாளர் அந்தியூர் செல்வராசு தலைமையில் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.


User: Oneindia Tamil

Views: 576

Uploaded: 2018-04-19

Duration: 01:31

Your Page Title