சேலம் குளத்தை சுத்தம் செய்த மன்சூர் அலிகான் ஆவேச பேட்டி- வீடியோ

சேலம் குளத்தை சுத்தம் செய்த மன்சூர் அலிகான் ஆவேச பேட்டி- வீடியோ

சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி சாலையை அமைத்தால் எட்டு பேரை வெட்டுவேன் என் நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக தெரிவித்துள்ளார் br br சேலம் மாநகர் அம்மாப்பேட்டையில் உள்ள குமர கிரி ஏரியை சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ் புனரமைத்து பராமரித்து வருகிறார். இந்த ஏரியை பார்வையிடுவற்காக நடிகர் மன்சூர் அலிகான் சேலம் வந்தார். பின்னர் ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகளை இளைஞர்களுடன் சேர்ந்து அகற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவேரி மேலாண்மை வாரிய அமைப்பதில் மத்திய அரசும் , பிரதமர் மோடியும் நடந்து கொள்ளும் விதம் வெட்கி தலைகுனிய வைக்கிறது. பிரதமருக்கு அனைத்து மாநிலங்களும் சமனானது , ஆனால் அவர் தமிழகத்தை வஞ்சித்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசுக்கு கேலி கூத்தாகிவிட்டது என்றார். தமிழகத்தில் சென்னை சேலத்தை இணைக்கும் எட்டு வழி சாலை திட்டம் தேவையற்றது என்றும் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டுப்பேரை வெட்டுவேன் என ஆவேசமடைந்த மன்சூர் அலிகான் , எட்டு வழிச்சாலைக்கு பதிலாக ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்களை நாட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.


User: Oneindia Tamil

Views: 6.4K

Uploaded: 2018-05-05

Duration: 04:02

Your Page Title