கடந்த இரு மாதங்களில் 70 போலீசார், ரவுடி மற்றும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல்

கடந்த இரு மாதங்களில் 70 போலீசார், ரவுடி மற்றும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல்

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக போலீசார் பல்வேறு காரணங்களுக்காக ரவுடிகளால் கொலை செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் ராயபேட்டை, ராயபுரம், வடசென்னை ஆகிய சென்னையின் பல்வேறு இடங்களில் மட்டும் 14 பேர் தாக்கபப்ட்டுள்ளனர். காவல்துறையினர் பணி சுமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக தொடர் தற்கொலை செய்துவரும் சூழலில், பணியில் இருந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் குற்றவாளிகளை கையாலும் போது ரவுடிகள் பயமின்றி காவலர்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு கொல்வதும், கடுமையாக தாக்கபப்டுவதும் மக்களுக்கான பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார்களே பயமின்றி தாக்கப்படும் போது, மக்களுக்கு எவ்வாறு இந்த அரசு பாதுகாப்பினை அளிக்கும் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 01:03

Your Page Title