டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது - உச்சநீதிமன்றம்

டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது - உச்சநீதிமன்றம்

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. இதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என கூறியது. கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என தெரிவித்தது.


User: Sathiyam TV

Views: 2

Uploaded: 2018-07-17

Duration: 01:23