தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தரப்பிலும் தவறு உள்ளது என்றும் போராட்டத்தின் போது போலீசார் வானத்தை நோக்கி ஏன் சுடவில்லை எனவும் இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். குட்கா வழக்கில் அமைச்சர்கள், காவல்துறை சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது, அதேபோல் துப்பாக்கிச் சூட்டிலும் காவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐக்கு ஏன் மாற்றக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐக்கு மாற்றுவதால் மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என அர்த்தமில்லை என்று கூறிய நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றனர்.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:24