இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுதலை செய்ய வேண்டும் - ராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுதலை செய்ய வேண்டும் - ராமேஸ்வரம் மீனவர்கள்

கடந்த ஒரு வார காலத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் 3 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில்; ஆலோசனைக்கூட்டம் நடத்தினர் இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளை விடுவிக்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:16

Your Page Title